Thursday, October 29, 2009

செருப்பு அணியும் உரிமை கிடைத்தது எப்போது?

என் கடையில் இரண்டுபேர் செருப்பு டிசைன் பார்த்துக்கொண்டிருந்தார்க்ள்। இருவருமே உயர்சாதியினர். பணவாடை வேறு வீசியது

ஒருவர்
"கோவிலுக்கு போயிட்டு வந்து பாக்குறேன் செருப்ப காணோம்"

"சனிய விட்டுது வா போவோம்"

செருப்பை வாங்கிக்கொண்டு இருவரும் போய்விட்டார்கள்.

"தம்பி" என்றார் கடையின் ஓரமாக நின்ற வயதானவர். 80 வயது இருக்கும்.

"இப்ப வந்தவங்க செருப்பு தொலஞ்சத சனிய விட்டுதுன்னு சொல்லிட்டு போறாங்க...இந்த செருப்பு போட நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா?
செருப்ப சனியன்னு சொல்றாங்க அதுக்காக நாங்க எத்தனை தலைமுறை ஏங்கியிருக்கோம் தெரியுமா?

பொடியில நடக்க முடியாம நெழல தேடி தேடி ஓடி நடப்போம்। மாடுமேக்கிறப்ப சூடுதாங்க முடியாம கிடேறி மேல ஏறிப்போவோம்.

ஆத்த கடக்கையில சூடுதாங்க முடியாம கைப்புள்ளைய கீழப்போட்டு புள்ளமேல ஏறினின்று புள்ளையக்கொன்ன கதோயோட கதையெல்லாம் இருக்குப்பா...இந்த செருப்பு இல்லாம.

எம்பாட்ட, முப்பாட்ட யாரும் செருப்பு போட்டது இல்ல...எங்க வம்சத்துல நான் தான் செருப்பு போட்டவன். இந்த செருப்பு போட்டதுக்காக என்னை எவ்வளவு அவமானப்படுத்திருக்காங்க தெரியுமா?

மனுசன் எதுக்கு ஆசைப்படுறானோ அதால அடிவாங்குறது இல்ல
செருப்பு போட ஆசைப்பட்டதுக்காக அதால அடிவாங்கி இருக்கேன் -நான்.

காலம் மாறீப்போச்சு செருப்போட நாங்கப்பட்ட கஷ்டம் எல்லாம் இப்ப இருக்கற மக்களுக்கு எங்கே தெரியுது.

அவாளும் சட்டை போடக்கூடாது தம்பி. இப்பதா காலம் மாறிப்போச்சே" என்று பெரியவர் நடை நடந்தார் என்னை கணக்கவைத்துவிட்டு.

செருப்பு இந்த சமூகத்தில் எப்படி கருதப்படுகிறது
ஒருவரை இழிவு செய்ய
நமது கோபத்தின் எச்சமாக
அதிகார அந்தஸ்தின் வெளிப்பாடாக
அவன் என் கால்ல போடுற செருப்புக்கு சமம்
(செருப்புதான் மனிதனை தாங்குகிறது)
அவன் என் செருப்புல இருக்குற தூசுக்கு சமம்.
மனிதனை அவமதிக்கும் ஒன்றாக செருப்பு எப்படி மாறியது?

செருப்பு இழிவான சொல்லாகக்கூட கருதப்படுகிறது.
அரியணையில் செருப்பை வைத்து நாடாண்ட தேசம் இது - என்கிறது ராமாயணம்.
மன்னர் காலத்தில் படைவீரர்கள் செருப்பு அணிந்தார்களா?

யோசித்தால்.....

முதலில் அல்லா சாதிக்காரர்களும் படைவீரர்களாக இருந்தார்களா? என்ற கேல்வி எழுகிறது. எல்லா சாதிக்காரர்களும் படைவீரர்களாகவும் இல்லை. எல்லா படைவீரர்களும் செருப்பு அனிந்ததற்கான ஆதாரமும் இல்லை.

சேர, சோழ, பாண்டிய படைவீரர்கள் செருப்பு அணிந்தார்களா என்று ஆராயவேண்டி உள்ளது. கட்டபொம்மன், ஊமைத்துரை படையில் அனைத்து சாதியினரும் படைவீரர்களாக இருந்து உள்ளனர். அனைவரும் செருப்பு அணிந்தும் உள்ளனர்.
சுதந்திர போராட்டத்தின் போது காங்கிரஸ்காரர்கள் கீழத்தெருக்களுக்கு வந்தது இல்லை।

ஆங்கிலேயர் காலத்துல இரும்புப்பாதை அமைக்க, சாலைப்போட பயன்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் சாக்கை காலில் சுத்திக்கொண்டும், காலுக்கடியில் சிறிய மரப்பலகையை வைத்து துணிசுத்திக்கொண்டும் வேலை செய்து உள்ளனர்.

ஆங்கிலேய படையில் அனைத்து சாதியினரும் படைவீரராக இருக்கவில்லை, தாழ்ந்த சாதியினர் படையில் சேரும் போது தான் அவர்களால் செருப்பு அணியமுடிந்தது।

சுரங்க தொழிலாளர்களாக வேலைப்பார்க்க கட்டயப்படுத்தப்பட்ட போது தான் பாலசாதியினர் செருப்பு(பூட்டு) அணியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

கீதாரிகளும், மேய்ப்பவர்களும் செருப்பு அணிய முடியாமல் பட்ட கஷ்டங்களும், உயிர் இழப்புக்களும் அதிகம்। செருப்பு போடுவது ஒவ்வொரு தனி மனிதனின் வெகுகால தொடர் ஆசை நிறைவேறிய தருணமாக 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அமைந்தது.

செருப்பு போடவும், குடைப்பிடிக்கவும், வேட்டியை தழைய கட்டவும், தோளில் துண்டுப்போடவும், ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு என்று பெரியார், அம்பேத்கார், இடதுசாரிகள் தொடர் போராட்டத்தின் மூலம் செருப்பு அணியும் உரிமை கிடைத்தது। இந்த உரிமை கிடக்க கல்வியும், ஆங்கிலேய அரசும் காரண்மாக இருந்தது எனலாம்.

தொற்று நோயால் பலர் இறந்தபோது தொற்றூனோய் பரவாமல் தடுக்க கட்டாயம் செருப்பு அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போதுதான் பெரும்பாலானோர் செருப்பு அணிந்து உள்ளனர்.

"சமீப ஆண்டுகாலமாக செருப்பு இல்லாமல் கல்லூரி செல்லும் மாணவர்களை நான் பார்த்ததில்லை. ஆனால், இன்றும் செருப்பு இல்லாமல் கல்லூரி செல்லும் மாணவிகளை பார்க்க முடிகிறது. இன்றைய கல்லூரி உலகில் செருப்பு இல்லாமல் நடக்கும் மாணவிகளின் கஷ்டம் உணரமுடிகிறதா நம்மால்?"

10 comments:

குடுகுடுப்பை said...

அருமையான முதல் பதிவு நலங்கிள்ளி.

உங்கள் பெயரே நலங்கிள்ளியா?

நலங்கிள்ளி said...

நன்றி குடுகுடுப்பை.
என் பெயர் நலங்கிள்ளி தாங்க!

கபிலன் said...

"மனுசன் எதுக்கு ஆசைப்படுறானோ அதால அடிவாங்குறது இல்ல
செருப்பு போட ஆசைப்பட்டதுக்காக அதால அடிவாங்கி இருக்கேன் -நான்."

செருப்பை பற்றிய விஷயங்கள் புதுசா இருக்கு.
தங்கள் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்!

லெமூரியன்... said...

ரொம்ப உணர்ச்சிகரமா கொண்டு போயிருக்க வேண்டிய பதிவு இது....! ஆதிக்க வர்க்கத்தின் கொடுர முகங்களை கிழித்து எரிகிறது இப்பதிவு... இம்மானுவேல் சேகரன் முத்துராமலிங்கத்திற்கு முன்னாள் பூட் அணிந்து அட்டினக்கால் போட்டு அமர்ந்தார் என்பதே அவரின் கொலைக்கான முதற்க் காரணம்.

அருமையான பதிவு நலங்கிள்ளி

நலங்கிள்ளி said...

"லெமூரியன் said...
ரொம்ப உணர்ச்சிகரமா கொண்டு போயிருக்க வேண்டிய பதிவு இது....! ஆதிக்க வர்க்கத்தின் கொடுர முகங்களை கிழித்து எரிகிறது இப்பதிவு... இம்மானுவேல் சேகரன் முத்துராமலிங்கத்திற்கு முன்னாள் பூட் அணிந்து அட்டினக்கால் போட்டு அமர்ந்தார் என்பதே அவரின் கொலைக்கான முதற்க் காரணம்.

அருமையான பதிவு நலங்கிள்ளி "

நீங்கள் சொன்னது போல சம்பங்கள் மாவட்டந்தோறும் பல நடந்திருக்கிறது. பதிவின் நீளம் கருதி, இந்தத் தகவலை பகிர்ந்துகொண்டதோடு நிறுத்திக்கொண்டேன்.

நன்றி லெமூரியன்!

நலங்கிள்ளி said...

"கபிலன் said...
"மனுசன் எதுக்கு ஆசைப்படுறானோ அதால அடிவாங்குறது இல்ல
செருப்பு போட ஆசைப்பட்டதுக்காக அதால அடிவாங்கி இருக்கேன் -நான்."

செருப்பை பற்றிய விஷயங்கள் புதுசா இருக்கு.
தங்கள் முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்! "

நன்றி கபிலன்!

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க நலங்கிள்ளி..

வணக்கம்.

உங்களின் வலைபூ ஈர்க்கும்படியாக இருப்பது மகிழ்ச்சி.

ஒரு வகையில் இணையத்தள சூழலுக்கு நுழையும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

தங்களின் செறிவான படைப்புகளை நான் தொடர்ந்து இவ்வலைபூவில் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

நன்றி.

விஷ்ணுபுரம் சரவணன்

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க நலங்கிள்ளி..

வணக்கம்.

உங்களின் வலைபூ ஈர்க்கும்படியாக இருப்பது மகிழ்ச்சி.

ஒரு வகையில் இணையத்தள சூழலுக்கு நுழையும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்.

தங்களின் செறிவான படைப்புகளை நான் தொடர்ந்து இவ்வலைபூவில் எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள்

நன்றி.

விஷ்ணுபுரம் சரவணன்

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல இடுகை நண்பரே...

நலங்கிள்ளி said...

நன்றி விஷ்ணுபுரம் சரவணன்.
நன்றி முனைவர். இரா.குணசீலன்.