Saturday, January 9, 2010

தைவிக -20/01/10

மனிதன் Vs மனிதன்

விளையாட்டில் பலவகை உண்டு
மிக மோசமான விளையாட்டு
ஒன்று உணடு
அதுதான்

******************************************************

தேநீர் வரலாறு
அறிந்த பின்னே
ஒரு கோப்பை தேநீர்
ஒரு கோப்பை ரத்தமாக.

******************************************************

எங்கும் வியாபித்திருப்பது
விளம்பரமா
வியாபாரமா
கடவுளா
அன்பா
வம்பா

******************************************************

அப்பா
வேலை செய்வதிலிருந்து
ஓய்வு பெற்றுவிட்டார்
அம்மாவுக்கு
எப்போது ஓய்வு

******************************************************

நீர் நீ
வெண்நீர் நான்
விளாவிக்கொள்ளலாம்

******************************************************

ஒரு பிரச்சனையை தீர்க்க முடியவில்லையா
இன்னொர் பிரச்சனையை பெரிதாய்
ஊதிவிடு
பிரச்சனைகள் இருக்கும் வரைக்கும்
பிரச்சனை இல்லை - அரசு நடத்த
இது எல்லாம்
அரசியல் வாதிகளின் பிரச்சனை
இது வெல்லாம்
அவர்கள் சிந்திக்க
நாம் சிந்திக்க
தொலைக்காட்சி தொடர்கள்
ராணி 6 ராஜா யாரு?
மானாட மயிலாட
தொடை தசைஆட
பார்த்து ரசித்தால் போதும்.

******************************************************

இனி இப்படிதான்
நாய் அடிப்பட்டால்
பரிதாப பார்வை
விபத்து ஏற்பட்டால்
கூடும் கூட்டம்
உதவும் கரங்கள்
சாலை, கடைவீதி
கொலையென்றால்
தலைதெரிக்க ஓட்டம்
இனி இப்படித்தான் நடக்கும்
பழகிக்கொள்ளவேண்டும்
நாம்தான்
நாய்போன்றோ
விபத்துபோன்றோ
நாளை நமக்கும் நடக்கலாம்
அவசரத்தில் அடையாளம்
தெரியாமல்
ஆள்மாரி நம்மையும்
வெட்டலாம்
பழகிகொள்ளவேண்டும்
இனி இப்படித்தான்

******************************************************

குளத்தில் கல்விழ
பயந்து படர்ந்தன
மீன்களும், பாம்பும்
கரை ஓர தலைபிரட்டையும்
எனக்குதான் தெரியவில்லை
வாழ

******************************************************

நினைவு தினம்
பதட்ட தினமாக
பயம் தரும் தினமாக
வருந்தும் தினமாகவே
வருகிறது
நினைவு தினம்
மறக்கமுடியுமா
மறந்து விட்டாயா
பலபாச வேகவசனத்தில்
வீசும் நினைவு தினம்
இன்னொர் உயிர்க்கு
நினைவு தினத்திற்கான
ஏற்பாட்டு தினமாக
உளமார அனுசரிக்கப்படுகிறது
எங்கள் மண்ணில்

******************************************************

நடப்பதையெல்லாம்
பார்க்க பார்க்க
வாள் எடுத்துவெட்டனும் போலிருந்தது
எனக்கு
வெட்டினேன்
துண்டு துண்டாக
செத்த மீனையும்
கோழியையும்.

******************************************************

அக்ரஹாரம்
மாறாமல் கிடக்கிறது
அய்யர்கள்
இல்லை இப்போது

******************************************************

6 comments:

sathishsangkavi.blogspot.com said...

//அக்ரஹாரம்
மாறாமல் கிடக்கிறது
அய்யர்கள்
இல்லை இப்போது//

நான் ரசித்த வரிகள்..

நலங்கிள்ளி said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும், நன்றி சங்கவி !

கபிலன் said...

கவிதைகள் அருமை!

விஷ்ணுபுரம் சரவணன் said...

அன்புமிக்க நலங்கிள்ளி..

உங்களின் தொகுப்பு கவிதைகளும் இப்போது நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கும் வடிவம், உள்ளடக்கம் இரண்டுலுமே நல்ல வளார்ச்சி தெரியவருகிறது. அதற்கு முதலில் வாழ்த்துக்கள்..

கல்யாண்ஜி ஒருமுறை சொன்னார் மாநகர பேருந்துகள் வேண்டுமானால் நிறுத்தத்தை தாண்டி நிற்கலாம். கவிதைகள் நிறுத்தத்தை தாண்டி நிற்ககூடாது என்று..இந்த பிரச்சினை எல்லாருக்குமே வருவதுண்டு

உங்களின் கவிதை ஒன்றில்..
அப்பா
வேலை செய்வதிலிருந்து
ஓய்வு பெற்றுவிட்டார்
அம்மாவுக்கு

இத்தோடு கவிதை முடிந்துவிட்டது அம்மாவின் ஓய்வு என்பது வாசகனின் வரி அதை கவிஞன் எழுதிவிடகூடாது என்பதில் உறுதியாயிருங்கள்.

இம்மாதிரியான சொற்பமான நெருடல்களையும் தவிர்த்து எழுத முயற்சியுங்கள்.

நன்றி..

விஷ்ணுபுரம் சரவண்ன்

நலங்கிள்ளி said...

நன்றி கபிலன்

நலங்கிள்ளி said...

நன்றி விஷ்ணுபுரம் சரவண்ன்